|

இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி!



ஜகர்தா:நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை முதல் சுனாமி அலை  தாக்கியது.

இந்தோனேஷியாவில் பாண்டா அச்சா அருகே ஏற்பட்ட நில நடுக்கத்தால்  இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியது. சுனாமி  அலைகள் அரை மீட்டரில் இருந்து 1 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை  என்றபோதிலும், இந்த சுனாமி அலை வலுவாக இல்லாததால் பெரிய அளவில்  பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்தடுத்து சுனாமி அலைகள் தாக்கலாம் என்பதால் மக்கள்  பீதியடைந்துள்ளனர்.
 இதனிடையே இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து,ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட இந்தியா,இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 28 நாடுகளிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி - விகடன்

பதிவு செய்தவர் Ameer on 6:01 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added