|

ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த போராட்டம் !




டென்மார்க்: ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த கோரி, டென்மார்க்கில் நேற்று திடீர் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் என்று ஐரோப்பிய நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆரஸ் நகரில் நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு இஸ்லாமியத்துக்கு
எதிராக கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழுவினர் போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

இதுதொடர்பாக 80க்கும் அதிகமானோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் இஸ்லாமியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்த 2,500க்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் மோதல் ஏற்பட்டது. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளதுஎன்றனர்.

பதிவு செய்தவர் Eshack on 2:25 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added