|

"இஸ்ரேல் நடத்திய இரட்டைக்கோபுர தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி பரபரப்பு தகவல்




"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது, தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள், ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும், பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும், தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ 9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது, அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும், அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈராக், ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு, அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில், அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது

பதிவு செய்தவர் Eshack on 7:47 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added