மம்தாவுக்கு எதிரான கார்ட்டூன் வெளியிட்ட பேராசிரியர் மீது தாக்குதல்: 4 பேர் கைது
ஜாதவ்பூர் பல்கலைகழக பேராசிரியர் அம்பிகேஷ் மகபத்ரா என்பவர் தனது சமூக வலைதளத்தில் ஏப்.12-ந்தேதி ஒரு கார்ட்டூனை வரைந்து வெளியிட்டிருந்தார். அந்த கார்ட்டூன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் மீது ஈவ் டீசிங், அவதூறு, பெண்ணை இழிவுபடுத்துதல், கணினியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பேராசிரியர் கைது செய்யப்பட்டதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அம்மாநில எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'பேராசிரியரை கைது செய்தது சரியே' என்று மம்தா கூறியுள்ள நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று கார்ட்டூன் வரைந்த பேராசியர் வீடு முன் திரிணாமுல் கட்சியினர் போராட்டம் நடத்தி அவரை தாக்கினர்.
இது குறித்து போலீசில் புகார் ஒன்றை பேராசிரியர் கொடுத்துள்ளார். அப்புகாரில் தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தன்னை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்தவர் ah kdnl
on 1:48 AM. தலைப்பு
அரசியல்,
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன