முஸ்லிம் லீக் கட்சிக்கு பதவி: எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி பந்த்
கேரள மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் 2-வது பெரிய கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அங்கம் வகிக்கிறது.
இந்த கட்சியை சேர்ந்த மஞ்சளம்குழி அலிக்கு மந்திரி பதவி அளிக்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி கேரளாவில் இன்று `கறுப்பு தினம்' அனுசரித்தது.
இதை அடுத்து, கேரள மாநிலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், மாநில அரசு அலுவலகங்கள் முன்பு கோஷங்கள் மற்றும் கடையடைப்பு, நடைப்பயணம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
இதில் நெய்யாற்றின்கரா மற்றும் கட்டக்கடா ஆகிய இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.
