கடிதத்தை அம்பலமாக்கியவர்கள் தேச துரோகிகள் : ஏ.கே.அந்தோணி
புதுடெல்லி : இந்திய ராணுவ தலைவர் வி.கே.சிங் கடந்த மார்ச் 12 ஆம் தேதி, பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த கடிதம் பத்திரிக்ககைகளுக்கு கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கடிதம் கசிந்த விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது. இதனையடுத்து, இக்கடிதம் பொது விவாதத்திற்கு உரிய கடிதம் அல்ல. ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கடிதம் அம்பலமானதற்கு ராணுவ தலைமை தான் பொறுப்பாகும் என்று பல்வேறு அரசியல் தரப்பினரும் வாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசுகையில், இந்த கடிதம் கசிவதற்கு காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தேச துரோகிளே என்று கூறியதோடு, இந்த தவறு ஏற்படுவதற்கு ராணுவ தலைமை தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், இந்த தேசதுரோகத்தை செய்தவர்களை விரைவில் சிபிஐ அடையாம் கண்டு, விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டிருப்பதாவும் கூறியுள்ளார்.
பதிவு செய்தவர் ah kdnl
on 7:46 PM. தலைப்பு
அரசியல்,
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன