|

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணிக்கு, நடைபயிற்சிக்கு சென்ற அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். காலை 9.30 மணி ஆகியும் ராமஜெயம் வீடு திரும்பாததால், அவரது உறவினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கல்லணை அருகே உள்ள புதரில் கிடந்தது. ராமஜெயத்தின் உடலை அவரது உறவினர்கள் பார்த்து அடையாளம் காட்டினர். திருச்சி டிஐஜி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடத்தல் சம்பவம் நடந்தது எப்படி?

வழக்கமாக நடைபயிற்சிக்கு தன் 2 உதவியாளர்களுடன் ராமஜெயம் செல்வது வழக்கம். இன்று அவரது உதவியாளர்கள் வராததால், அவர் மட்டும் தனியாக நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் அவரை கடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

திருச்சியில் பதற்றம் : போலீஸ் குவிப்பு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு தொண்டர்க கூடியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்ததால் திருச்சியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது

பதிவு செய்தவர் ah kdnl on 7:45 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added