|

கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக சட்டசபையில் ஜெ., அறிவிப்பாரா?

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்ட அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் தாலுகாக்கள் உள்ளன. செஞ்சி தாலுகாவில் 246 கிராமங்கள், கள்ளக்குறிச்சி, 154, சங்கராபுரம், 179, திண்டிவனம், 234, திருக்கோவிலூர், 182, உளுந்தூர்பேட்டை, 175, வானூர், 81 மற்றும் விழுப்புரம் தாலுகாவில், 239 கிராமங்கள் உள்ளன. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தாலுகாக்களோடு, சின்னசேலம், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா புதிதாக உருவாக்கி, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட ஆண்டுகளாக உள்ளது.



கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உருவாக்கும் பணிகள் துவங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை, தற்போதைய பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக முதல்வர் ஜெ., அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பதிவு செய்தவர் ah kdnl on 9:01 AM. தலைப்பு , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added