இஸ்ரேலுக்கு எதிராக ஐநா மனித உரிமை கமிசன் தீர்மானம்
பலஸ்தீன குடியிருப்புகளைஇஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமித்து தரைமட்டமாக்கி வருவது அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளில்ஒன்றாகும். உலக நாடுகள் அனைத்தும் கண்டும் காணதது போன்று செயல்பட்டுவந்தது. தற்போதுஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமைப் பிரிவு, இஸ்ரேலின் இந்த மனித உரிமைக்கெதிரான செயலைவன்மையாக கண்டித்து தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.
47 உறுப்பினர்களைகொண்ட இக்குழுவில், இஸ்ரேலுக்கெதிரான தீர்மானத்தை 36 நாடுகள் ஆதரித்து ஒட்டளித்தது,அமெரிக்க இத்தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்தது , எஞ்சியுள்ள 10 நாடுகள் ஒட்டெடுப்பில்கலந்துகொள்ளவில்லை.
தீர்மானத்தின்முக்கிய அம்சமாக, இஸ்ரேலியர்களால் பலஸ்தீன மக்கள் தாக்கப்படுவதை இஸ்ரேலிய அரசு தடுத்துநிறுத்த வேண்டுமென ஐநா மனித உரிமை கமிசன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலியர்களால்பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களிடம் ஐநா மனித உரிமை கமிசன் விசாரனண மேற்கொள்ள வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பலஸ்தீனில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அதிகப்படுத்துவோம்என்ற இஸ்ரேலின் தீர்மானம் உலக மனிதஉரிமை சட்டத்திற்கு எதிரானது. ஆகையால் அத்தீர்மானத்தைஇஸ்ரேல் உடனே திரும்பப் பெற வேண்டும் என இக் கமிசன் வலியுறுத்தியுள்ளது.
மேற்கு கரையிலும்கிழக்கு ஜெருசலத்திலும் 5 இலட்சத்திற்கும் அதிகமான இஸ்ரேலியரகள் அத்துமீறி குடியேறியுள்ளார்கள்என்பது குறிப்படத்தக்கது.
மேலும் பலஸ்தீனர்களின்இந்த அவல நிலை உலகமக்களிடையே ஒரு மாற்றத்தை உருவாக்கியதன் பின்னணிதான் இஸ்ரேலுக்கெதிரானஇந்த 36 ஓட்டுகளும், ஐநா மனித உரிமை கமிசனின் தீர்மானமும்.
இந்த தீர்மானத்தைபலஸ்தீன் வரவேற்றுள்ளது. வழக்கம்போல் இத்தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாகஎதிர்த்துள்ளது..
பதிவு செய்தவர் Ameer
on 3:36 PM. தலைப்பு
உலகம்,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன