ராணுவ தளவாடங்கள் வாங்கிட ரூ .14 கோடி ; லஞ்சம் : தளபதி சிங் திடுக் தகவல்
புதுடில்லி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்திற்கு வாகனங்கள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் வழங்குவதாக ஒரு புரோக்கர் மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ராணுவ தளபதி வி.கே., சிங் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சுமார் 600 வாகனங்கள் வாங்கப்பட்டது என்றும் இதற்கென புரோக்கர் ஒருவர் மூலம் தன்னிடம் பேசினார். இது குறித்து நான் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளேன் .விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.