சவூதியருக்கு மரணதண்டனை
போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக சவூதி அரேபியர் ஒருவருக்கு அந்நாடு இன்று (புதன் 04.07.12) மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. இச்செய்தியை சவூதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி ஸ்தாபனமான சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.
வடக்குப் பிராந்தியமான அல்ஜவ்ஃப் நகரில் அலீ அல் முஸய்யின் என்னும் பெயருடைய ஆள் இவ்வாறு தண்டிக்கப்பட்டார். அம்ஃபிட்டாமைன் எனப்படும் போதை மாத்திரைகளை அதிக அளவில் கடத்தியதாக அவர்மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வாண்டு சவூதியில் மரணதண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
போதை மருந்து கடத்தல் குற்றத்துக்கு சவூதி, சிங்கை, அமெரிக்கா உட்பட உலகின் அநேக நாடுகள் மரண தண்டனை அளிப்பது குறிப்பிடத்தக்கது. சவூதியில் போதை கடத்தல் உட்பட, மனித உரிமை மீறல் குற்றங்களான கொலை, வண்புணர்வு, ஆயுதக் கொள்ளை ஆகியவற்றுக்கும் ஷரியா விதிப்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
பதிவு செய்தவர் Yasar
on 12:08 AM. தலைப்பு
உலகம்,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன