|

20 ஓவர் கிரிக்கெட்: கெய்ல் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி- நியூசிலாந்தை வீழ்த்தியது

நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இருக்கும் புளோரிடா மாகாணத்தில் உள்ள லவ்டர்வரில் மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. கிறிஸ் கெய்ல் 52 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்னும் (அவுட் இல்லை), பொல்லார்ட் 29 பந்தில் 63 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 18.3 ஓவரில் 153 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 56 ரன்னில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தொடக்க வீரர் நிக்கோல் அதிகபட்சமாக 32 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் நரீன் 3 விக்கெட் கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.

பதிவு செய்தவர் ah kdnl on 5:05 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added