2:14 AM | பதிவு செய்தவர் ah kdnl
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி எம்.பி., ஒருவரது வீட்டில் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அகிலேஷ் தலைமையிலான அரசு போலீசார் தெரிவித்துள்ளனர்.
லக்னோ அருகே லஷ்மிபூர்கேரி பகுதியில் இந்த கட்சியை சேர்ந்த எம்.பி., ஜூகல் கிஷோர் வீடு உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு வாலிபர் இந்த சபம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது பெயர் பிரீஜேஸ். இந்த வழியாக திருமணத்திற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த சுபிக்ஷாவை (வயது 16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த நபர் வ<லுக்கட்டாயமாக தூக்கி சென்றார். எம்.பி.,வீட்டுக்குள் கொண்டு சென்று துப்பாக்கியை காட்டி சம்மதிக்க வைத்தார். பின்னர் அந்த பெண் தன்நிலை மறந்து மயங்கிய நிலையில் கிடந்தார். வீடு திரும்பாததால் அவரை தேடிய அந்த பெண் குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்வம் குறித்து அந்தப்பெண் போலீசாரிடம் கூறுகையில்; நான் இரவு 11 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். பின்னால் வந்த ஒரு நபர் எனது வாயை துணியால் மூடி இழுத்து சென்றார். எம்.பி.,வீட்டிற்குள் கொண்டு சென்று துப்பாக்கி மற்றும் கத்தியால் என்னை மிரட்டினார். பல முறை அடித்தார். எனக்கு ஏற்பட்ட அச்சத்தில் நான் அவர் கற்பழிப்புக்கு சம்மதித்தேன். பின்னர் மயங்கி விட்டேன் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்றார் கண்ணீருடன்.