லஷ்கர் - சயீத் விவகாரம் : ஆதாரமெங்கே? - அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்கிறது
லஷ்கர் இ தய்பா தலைவர் ஹஃபீஸ் சயீத் தலைக்கு, பத்து மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பிற்கு, சயீத்துக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் கொடுங்களேன் என்று பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது.
லஷ்கர் இ தய்பா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் பற்றி தகவல் தந்தால், ரூ.50 கோடி (பத்து மில்லியன் டாலர்) பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா திடீரென நேற்று அறிவித்திருந்தல்லவா, அதற்கு சயீத் பதில் அளிக்கையில், "நான் எங்கும் ஓடிவிடவில்லை. பாகிஸ்தானில்தான் இருக்கிறேன். நாளை லாகூர் செல்கின்றேன். அங்கு அமெரிக்க அதிகாரிகள் என்னை சந்திக்கலாம். என் தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ.50 கோடியை என்னிடமே கொடுங்கள் என்று பகிரங்கமாக பேட்டி அளித்தார். இந்நிலையில், சயீத்துக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித், சயீத் விவகாரம் பற்றி கூறுகையில், 'பாகிஸ்தான் போன்ற ஜனநாயக நாட்டில் நீதிமன்றங்கள் சுய அதிகாரம் படைத்தவையாக உள்ளன. யார் மீது குற்றச்சாட்டு எழுந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும். சயீத் விவகாரம் பற்றி விவாதம் நடப்பது தேவையில்லாதது. அமெரிக்காவிடம் இருந்து தெளிவான ஆதாரங்களை கேட்டுள்ளோம்' என்றார்.
பதிவு செய்தவர் Eshack
on 5:09 PM. தலைப்பு
உலகம்,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன