அக்னி 5 ஏவுகணை விண்ணில் பாய்ந்தது
கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையான அக்னி 5 ஏவுகணை இன்று காலை 8.05க்கு வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. 5000 கி.மீ., வரையிலான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி 5. ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டுகளை தாங்கி மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின்
நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ்,
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் இத்தகையை
ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேலிடம் இத்தகைய நவீன ஏவுகணை உள்ளது என்று கூறப்பட்டாலும்,
அதிகாரபூர்வமாக அந்நாடு இதுகுறித்து தெரிவித்ததில்லை. பல்வேறு
சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே வடகொரியா இத்தகைய ஏவுகணையை ஏவும்
முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
பதிவு செய்தவர் Ameer
on 9:45 AM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன