|

ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா...


சென்னை: சசிகலா மீது அதிமுக எடுத்திருந்த ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

சசிகலா அளித்த விளக்கத்தை ஏற்பதாக, முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், சசிகலா தவிர மற்றவர்கள் மீதான நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பின் மூலம், சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் செல்வது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தாம் கனவிலும் துரோகம் செய்ய நினைத்தது இல்லை என்றும், அவருக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டதாகவும் சசிகலா விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தவர் Yasar on 4:24 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added