9:57 AM | பதிவு செய்தவர் Ameer
கூடங்குளம் அணுஉலையை மூடிட கோரி போராட்டம் வலுப்பெற்று வருகின்றது. இப்போராட்டத்தினை ஒடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் போராட்டக்காரர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை, அவதூறுகளை பரப்பிவருகின்றது. இப்போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் என ஆர்பாட்டங்களையும் பேரணிகளையும் தமிழகம் இந்தியா மற்றும் உலகளவில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்ற நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூடங்குளம் போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக கவன ஈர்ப்பு கொண்டுவருவாதக இராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உறுதியளித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற PUCL அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அணுஉலைக்கு எதிராக தன்னுடைய கருத்தை இவ்வாறு பதிவுசெய்தார்.
யாரெல்லாம் நாட்டிற்கு நம்மை செய்கிறார்களோ அவர்களை எல்லாம் இந்த இந்திய
அரசு தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துகிறது. இப்போது உதயகுமார்
போன்றவர்கள் தன்னலமற்று சுற்றுப்புற சீர்கேடுகளில் இருந்து இந்த நாட்டை
காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள். விதி முறை மீறி கூடங்குளம் அணு
மின் நிலையம் கட்டப் பட்டுள்ளது . சர்வதேச அணுசக்தி கழகத்தின் அடிப்படை
கோட்பாடுகள் கடைபிடிக்க பட வில்லை . அதை எதிர்த்து கேட்டால் அவரை தேசத்
துரோகி என்கிறது. இப்படி சட்டத்திற்கு புறம்பாக , விதிமுறைகளுக்கு புறம்பாக
, மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல் திறக்கப் படுகின்றன இந்த அணு
உலைகளுக்கு ஆதரவாக செயல் படுகின்ற மன்மோகன் சிங் தான் தேசத் துரோகி. அவரை
தான் தேசத் துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் .