|

சபாஷ் சரியான கேள்வி,ஆனா பதில்....!


புது தில்லி :

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு அன்னா ஹசாரேவை தாம் மதித்தாலும் ஊழலை ஒழிக்க எவ்வித விஞ்ஞான அடிப்படையிலான திட்டங்களும் அவரிடம் இல்லை என்றும் ஊழலை விட முக்கியமற்ற விஷயங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஊடகங்கள் ஊழல் ஒழிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம், ராகுல் டிராவிட்டின் ஓய்வு, ஐஸ்வர்யா பச்சனின் பிரசவம், நடிகர் தேவ் ஆனந்தின் மறைவு போன்றவற்றிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கட்ஜு குற்றம் சாட்டினார்.

அன்னா ஹசாரே ஒரு நேர்மையான மனிதர் என்று தான் நம்பும் அதே சமயத்தில் ஊழலை ஒழிக்க அவரிடம் எவ்வித விஞ்ஞான பூர்வ திட்டங்களும் இல்லை என்றும் கட்ஜு கூறினார். பாரத் மாதா கி ஜெய் மற்றும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று 10 நாட்கள் கோஷமிடுவதால் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் நீண்ட கால நோக்கில் ஆக்கபூர்வ திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மார்க்கண்டேய கட்ஜு கூறினார்

பதிவு செய்தவர் Yasar on 4:48 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added