சவுதி தூதரக அதிகாரி பங்களாதேஷில் சுட்டுக் கொலை
![]() |
| படம் - அரப் நியுஸ் |
சவுதி தூதர அதிகாரி கலாப் பின் முஹம்மது சலீம் அல் அலி, அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது துப்பாக்கி குண்டுகள் நெஞ்சினுள் பாய்ந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பங்களாதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிபு மேன்சி, இக்கொலையில் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சகம், பங்களாதேஷில் உள்ள சவுதி அதிகாரிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கலாப் பின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
![]() |
| படம்-அரப் நியுஸ் |

