|

ஆசிய மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதியில் 8 இந்திய வீராங்கனைகள்



புது தில்லி, மார்ச் 22: ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் 8 பேர் முன்னேறியுள்ளனர்.

மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் 5 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவரான மேரி கோம், மோனிகா சான், பூஜா ராணி ஆகியோர் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறினர். முன்னதாக புதன்கிழமை 4 பேர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்த 8 பேரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். ஆசிய குத்துச்சண்டை வரலாற்றில் இந்திய வீராங்கனைகள் 8 பேர் பதக்கத்தை உறுதி செய்திருப்பது இதுதான் முதல்முறை. இதன்மூலம் அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர் என்று இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சுற்றில் வெல்பவர்களுக்கு தங்கமும், தோற்பவர்களுக்கு வெள்ளியும், அரையிறுதியில் தோற்றால் வெண்கலமும் வழங்கப்படும்.

பதிவு செய்தவர் ah kdnl on 4:09 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added