புற்றுநோய் மற்றும் மகப்பேறு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5 லட்சம் பேர் புற்றுநோயினால் இறக்கின்றனர். உலகில் உள்ள மொத்த கர்பப்பை புற்றுநொயாளிகளில் 26 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். தமிழகத்தில் 1990களில் 10 சதவீதமாக இருந்த மார்பக புற்றுநோய் 2011ல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெண்களிடையே அதிகரித்து வரும் புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவிட்டதனை கருத்தில் கொண்டு NWFன் சார்பாக இப்புற்றுநோய் மருத்துவ விழிப்புணர்வு முகாம் இலவசமாக நடத்தப்பட்டது.
NWFன் நெல்லை மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையேற்று நடத்திய இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi


புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்த விழிப்புணர்வு உரையாற்றுவதற்காக முறையே நெல்லை Peace Health Centre சேர்ந்த Dr.R.அன்பு ராஜன் அவர்களும், நெல்லை ராயல் மருத்துவமனையைச் சேர்ந்த Dr..மங்கையர்க்கரசி அவர்களும் இம்முகாமிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi
மருத்துவர் அன்புக்கரசி புற்று நோய் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்
விழிப்புணர்வு உரைக்கு பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தில் புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்து பெண்களிடையே நிலவும் சந்தேகங்களுக்கு இரு மருத்துவர்களும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் பதிலளித்தனர்.

முகாமில் கலந்து கொண்ட பெண்களும் எந்தவித தயக்கமுமின்றி பெண்களுக்கே உரிய பல்வேறு நோய்கள் குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகங்களையும், மேலும் ஆரோக்யமாக வாழ்வதற்கான பல யோசனைகளையும் பல்வேறு கேள்விகளின் மூலம் கேட்டு விளக்கம் பெற்றனர்.


கேள்வி-பதில் நேரத்திற்கு பின்னர் மருத்துவர்களை நேரில் சந்தித்து விளக்கம் பெற விரும்பியவர்களுக்கான தனி-நபர் ஆலோசனை நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர்


முகாமில் கலந்து கொள்ளும் பெண்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காக அவர்களின் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு போட்டிகளும், நல்ல பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் சில வீடியோ காட்சிகளும் தனி அறைகளில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முகாமின் இறுதியில் மேடைக்கு அழைத்து பரிசு வழங்கப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட பெண்களிடையே நிலவும் ஆரோக்யம் குறித்த தேடுதலுக்கு நம்மால் இயன்ற ஒத்துழைப்பு அளிக்கும் வண்ணம் மருத்துவம் மற்றும் ஆரோக்யமாக வாழ்வது குறித்த பல்வேறு அரிய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைவிட ஆர்வமுடன் பல பெண்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தீர்ந்து போன சில குறிப்பிட்ட புத்தகங்களை கூட மீண்டும் தங்களுக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு ஆர்வத்துடன் கோரினர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi


Book Stall on NWF medical awareness camp Eruvadi



6:48 PM | தலைப்பு: , , | Read More »

காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பாப்புலர் பிரண்ட் வெளியிட்டுள்ள சுவரொட்டி


5:46 PM | தலைப்பு: , , | Read More »

இந்திய பிரடர்னிடி ஃபாரத்தின் ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரம்

இந்திய பிரடர்னிடி ஃபாரத்தின் ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஜித்தா சவுதி அரேபியாவில் ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற முழக்கத்துடன் ஆந்திர மாநில முன்னாள் கால்பந்து வீரர் மிர் கஸன்பர் அலி ஜக்கி அவர்கள் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

அரப்நியுஸில் வெளிவந்த செய்தியின் லிங்க்

                  Click Here

5:35 PM | தலைப்பு: , , | Read More »

சன் செய்திகள் 27/01/2012

சன் செய்திகள் 27/01/2012


6:07 PM | தலைப்பு: | Read More »

இஸ்ரேலிய இணைய தளங்களை குறிவைக்கும் பலெஸ்தீனிய ஹாக்கர்கள்

இஸ்ரேலிய இணைய தளங்களை குறிவைக்கும் பலெஸ்தீனிய ஹாக்கர்கள் ...
 


8:55 PM | தலைப்பு: | Read More »

சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும்... - பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா.

சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் 11.01.2012 அன்று மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






சுதந்திர தினத்தை கெளரவிக்கும் விதமாகவும், தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய தியாகிகலை போற்றும் விதமாகவும், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும், போராடிபெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைத்து மக்களு உறுதி மொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்க செய்யும் விதமாகவும் தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகின்றோம்.

2008ம் ஆண்டு மதுரையிலும், 2009ம் ஆண்டு கும்பகோணத்திலும், 2010ம் வருடம் மேட்டுப்பாளையத்திலும் இதனை நடத்தியுள்ளோம்.

கடந்த 2011 ஆகஸ்ட் 15 அன்று நெல்லையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தோம். ஆனால் சிறுபான்மை விரோதபோக்குடன் செயல்பட்ட அப்போதைய நெல்லை மாநகர காவல்துறை நீதிமன்றத்தை அணுகுவதற்கு கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடாது அளவிற்கு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தது.

இதனை கண்டித்து ஆகஸ்ட் 17 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து காவல்துறை ஆணையரின் ஆணையை ரத்து செய்யக்கோரியும், சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடத்த, ஏற்கனவே திட்டமிட்ட அந்த அணிவகுப்பை வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அதே இடத்தில் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தோம்.
நீதிமன்றத்தில் அந்த மனுவின் மீதான் விசாரணையில் குடியரசு தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என நெல்லை காவல்துறை சார்பாக வாதிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர். அது மட்டுமின்றி ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பாப்புலர் ஃப்ரண்டின் மீது சுமத்தியது காவல்துறை. இந்த குற்றச்சாட்டுகலை மறுத்து பாப்புலர் ஃப்ரண்ட் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவிற்கு காவல்துறை நீதிமன்றத்தில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே நெல்லை மாநகரில் பாளையங்கோட்டையின் பொது வீதிகளில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கடந்த வருடம் ஜனவரி 29 அன்று அனுமதி வழங்கிய நெல்லை மாநகர காவல்துறை, பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு மட்டும் அனுமதி மறுத்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவ உரிமைக்கும் (பிரிவு 14) எதிரானது மற்றும் பாரபட்சமானது என பாப்புலர் ஃப்ரண்டின் வழக்கறிஞர் திரு. தி. லஜபதிராய் அவர்கள் கடந்த வாரம் 04.01.2012 அன்று உயரி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வாதாடினார்.

இந்நிலையில் 10.01.2012 இந்த வழக்கு இறுதிகட்டத்தை அடைந்தது. அன்றைய தினமும், அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து வேண்டுமென்றே கால நீட்டிப்பு கோரியது அரசு தரப்பு. சுதந்திரத்தை கொண்டாடுவதற்கோ, பொது நிகழ்ச்சிகள், நடத்துவதற்கோ அனுமதி கோரினால் சிறுபான்மையினருக்கு மட்டும் திட்டமிட்டு மேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் செயல்பட்டு அனுமதி மறுக்கின்றது காவல்துறை என பாப்புலர் ஃப்ரண்டின் வழக்கறிஞர் திரு எஸ்.எம்.ஏ ஜின்னா அவர்கள் வாதாடினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தினங்களை தவிர மற்ற நாட்களில் மைதானத்திற்குள் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க தயாராக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் இதை தவிர்த்து வேறு நாட்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுவது அதற்குரிய பலனை நிறைவு செய்யாது என்றும், மேலும் மக்களுடைய சுதந்திர உணர்வுகளை வெளிப்படுத்த அது பொருத்தமாக அமையாது என்பதனாலும், மற்ற தினங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் அணிவகுப்பை நடத்த முடியாது. எனவே ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சுதந்திர உணர்வுகளை வெளிப்படுத்தும் அணிவகுப்பு நடத்த முஸ்லிம்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லையென்றால், வேறு நாட்களில் நடத்துவதற்கான உத்தரவு தேவையில்லை. ஆகவே நாங்கள் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கின்றோம் என பாப்புலர் ஃப்ரண்டின் வழக்கறிஞர் எஸ்.எம்.ஏ ஜின்னா அவர்கள் வாயிலாகத் தெரிவித்து, ரிட் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டோம்.

போராட்டம் தொடரும்:

மனுவைத்தான் வாபஸ் வாங்கியிருக்கின்றோமே தவிர, முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை வாபஸ் வாங்கவில்லை.

இந்தியாவில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் இந்த மாபெரும் அநீதியை எதிர்த்து சட்டரீதியான போராட்டங்கள் தொடரும்; அதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு போதும் பின்வாங்காது என்பதை மக்கள் மன்றத்தில் நாங்கள் பதிவு செய்ய விரும்புகின்றோம்." இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2:41 PM | தலைப்பு: , , , | Read More »

இஸ்ரேலின் கருவியாக இந்தியா செயல்படக்கூடாது! - பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அறிக்கை.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் இஸ்ரேலுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. துரதிஷ்ட வசமாக‌ நம்முடைய அரசு அமெரிக்கா மற்றும் அதனின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் கடுமையான கொள்கையை செயல்படுத்தும் கருவியாக செயல்பட்டு வருகின்றது.



இந்தியா இஸ்ரேலின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலின் தூதரகம் பெங்களூரில் திறக்கப்படும் என்ற முடிவை தேச நலனிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஒன்றாக பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. மதவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் கையில் சிக்குண்டு கிடக்கும் மாநிலமான கர்நாடகாவில் இஸ்ரேலிய தூதரகம் அமையவிருப்பது ஃபாசிஸ்டுகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும்.

சியோனிச தீவிரவாத கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் நாடான இஸ்ரேல்தான் நவீன கால தீவிரவாதத்திற்கு வித்திட்டு வருகின்றது என்பதனை நாகரீக உலகில் உள்ள அனைவரும் அறிவர். குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளாக சியோனிச தீவிரவாதத்தால் பாதிப்பிற்குள்ளாகி வரும் பலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் தீவிரவாதத்தை நன்கு அறிவர். இஸ்ரேல் தன்னுடைய தூதரகத்தை இந்தியாவில் டில்லியிலும் ஏற்படுத்தப்பட்டு 1992ஆம் ஆண்டு பரஸ்பரத்தை துவங்கினர். இந்தியாவில் இஸ்ரேலிய தூதரகம் துவங்கப்பட்டு பின்புதான் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக இந்தியா பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தனது கணக்கை துவங்கியதிலிருந்து பலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் இஸ்ரேல் இழைத்து வரும் அக்கிரமங்களை எதிர்த்து எடுக்கப்படும் தீர்மானங்களில் இந்தியா தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.

மஹாத்மா காந்தி சொன்னது போன்று எப்படி இங்கிலாந்து - ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமோ அது போன்று பஸ்தீன் பலஸ்தீனர்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தாங்கள் நிலைத்திருப்போம்  என ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல தருணங்களில் உறுதிபடுத்தியுள்ளது.

பலஸ்தீனை பிரிக்கக்கூடிய விவகாரத்தில் இந்தியா எப்போதுமே எதிர் கருத்தைத் தான் கொண்டுள்ளது. மேலும் யூதர்கள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு சமமான அரசியல் உரிமையை வழங்கும் ஒரு தேச கொள்கையிலும் இந்தியா உறுதியாக இருந்து வந்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் காலம் தொட்டு ராஜீவ் காந்தி காலம் வரை இது தான் நம்முடைய கொள்கையாக இருந்து வந்தது.

எனவே, பலஸ்தீன மக்களின் துயரங்களோடு நாங்களும் இருக்கின்றோம் என்பது போன்று காட்டிக்கொண்டு மறுபுறம் ரவுடி நாடான இஸ்ரேலை அரவணைக்கும் நயவஞ்சக போக்கினை இந்தியா உடனடியாக கைவிட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஐக்கிய முற்போக்கு அரசினை கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்

2:39 PM | தலைப்பு: , , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added