|

தாமதிக்கப் பட்ட நீ.....தி!




2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஷ்ரா ஆகியோர், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுத்ததோடு, கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவற்றை மறுசீரமைப்பதற்கு ஆகும் செலவையும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

கலவரத்தின் போது நடைபெற்ற இந்த சேதம் குறித்து மாநில அரசு தகவல்களைத் திரட்டியுள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

குஜராத் மாநில அரசின் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான குஜராத் மாநில கூடுதல் வழக்கறிஞர் துஷார் மேத்தா மற்றும் ஹேமந்திகா வாஹி ஆகியோர், அரசியல் சாசணத்தின் படி வழிபாட்டுத் தலங்களுக்கு எந்த அரசும் நிதி உதவி அளிக்கக் கூடாது என்பதால் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என வாதிட்டனர்.

முன்னதாக கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களின் சீரமைப்புக்கு அரசு நிதி அளிக்க வேண்டும் என்று கோரி 2003ஆம் ஆண்டு குஜராத் இஸ்லாமிய சீரமைப்புக் குழு குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாநிலத் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி பர்டிவாலா ஆகியோர் அரசு நிதி வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.



பதிவு செய்தவர் Yasar on 11:41 AM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added