ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல்: கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்
செய்து கொண்டார். முதல் கணவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வது கணவர் மூலம் கர்ப்பம் ஆனார். ஜாகீரை திருமணம் செய்வதற்காக ரூபி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனால் சர்ச்சை உருவானது. நேற்று முன்தினம் ரூபிநாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து இருவரையும் தாக்கியது. பின்னர் ஓடிவிட்டனர். போலீசார் சென்று ரூபி, ஜாகீரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வரும் ரூபிநாத் எம்.எல்.ஏ. கூறுகையில், ஓட்டலுக்குள் புகுந்த கும்பல் முதலில் என்னிடம் சில்மிஷம் செய்தனர். தொடர்ந்து பலவந்தம் செய்து கற்பழிக்க முயன்றனர். அவர்களுடன் போராடினேன். இதனால் என்னை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கினர். இதற்கு அரசியல் தூண்டுதல்தான் காரணம். யார் செய்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் என்றார். இதற்கிடையே பெண் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கரீம் கஞ்ச் நகரில் பதட்டம் நிலவுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூபி ஆரம்பத்தில் பாரதீய ஜனதாவில் இருந்தார். பின்னர் காங்கிரசில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
