|

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா இல்லை மர்டர் கம்யூனிஸ்ட்டா ?

இடுக்கி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துரோகம் செய்தோரை படுகொலை செய்துள்ளோம்...இன்னும் கொலை செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்ட செயலாளர் மணியின் பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் வடகரையை அடுத்து ஒஞ்சியம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்குடன் இருந்தவர் சந்திரசேகரன். இவர் அச்சுதானந்தனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இதனால் பினராய் விஜயன் தரப்பினர் இவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்சியில் இருந்து விலகிய சந்திரசேகரன் தனிக் கட்சியை தொடங்கினார். இந்நிலையி்ல் அண்மையில் சந்திரசேகரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெரும் மோதலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இடுக்கியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் மணி, பல அரசியல் சதிகாரர்களை மார்க்சிஸ்ட் கட்சி கொலை செய்துள்ளது. இனியும் இதுபோன்றவர்களை எங்கள் கட்சி கொலை செய்யும்.

கட்சி விரோதிகளை நாங்கள் பட்டியல் போட்டு கொலை செய்துள்ளோம் என்றார். இடுக்கி மாவட்ட செயலரின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு செய்தவர் Yasar on 9:33 AM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added