4:46 PM | பதிவு செய்தவர் ah kdnl
சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எச்.எல். தத்து, அனில் தபே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் பேரில் ராமர் பாலத்தை ஆய்வு செய்ய ஆர்.கே. பச்சவுரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். கடந்த 29-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக நிபுணர்களுடன் அரசு ஆலோசித்து வருகிறது. எனவே கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 2 வார கால அவகாசம் அளித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தது.
இதை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.