ஆந்திரா: பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பில்லாத மாநிலம்
புதுதில்லி, மார்ச்.29: பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் அடிப்படையில் 4 தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பில்லாத மாநிலம் என்று தெரியவந்துள்ளது.
தேசிய குற்ற ஆவணத் துறை சேகரித்துள்ள தகவலில் இது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் பலாத்காரம், பாலியல் குற்றச் சம்பவங்களில் ஆந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதர 3 மாநிலங்களை ஒப்பிடும்போது ஆந்திராவில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2 மடங்காக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலைமைதான் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 1257, 1189 மற்றும் 1362 பாலியல் வழக்குகள் ஆந்திராவில் பதிவாகி உள்ளன. இதர மாநிலங்களில் 500 வழக்குகள்தான் பதிவாகி உள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் இதர மாநிலங்களைவிட ஆந்திராவில்தான் இருமடங்காக உள்ளது. எனவே தேசிய குற்ற ஆவணத் துறையின் தகவலின்படி ஆந்திரப் பிரதேசம் இதர மாநிலங்களைவிட பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பில்லாத மாநிலம் என்று தெரியவந்துள்ளது. அதேசமயம் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கர்நாடகாவில்தான் குறைந்த எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆந்திராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
பதிவு செய்தவர் ah kdnl
on 7:41 PM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன